செய்திகள் மலேசியா
புகைமூட்டம்: சரவாக்கில் 591 பள்ளிகள் இன்றும் நாளையும் மூடப்பட்டன
கூச்சிங்:
சரவாக்கில் உள்ள 10 மாவட்டக் கல்வி அலுவலகங்களின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் மொத்தம் 591 பள்ளிகள், இன்று முதல் நாளை வரை உடனடியாக மூடப்படும்.
சரவா மாநிலக் கல்வித் துறை இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில்,
இந்த மூடல்களில் மொத்தம் 107,590 மாணவர்களைக் கொண்ட 509 தொடக்கப் பள்ளிகளும், 89,733 மாணவர்களைக் கொண்ட 82 இடைநிலைப் பள்ளிகளும் அடங்கும் என்று அறிவித்துள்ளது.
இந்தப் பள்ளிகள் கூச்சிங், படவான், பாவ், லுண்டு, சமரஹான், சிமுஞ்சான், செரியான், ஸ்ரீ அமான், லுபோக் அந்து, பெடோங் ஆகிய மாவட்டக் கல்வி அலுவலகங்களின் மேற்பார்வையின் கீழ் உள்ளன.
இதற்கிடையில், சரவா மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்ட ஓர் தனி அறிக்கையில்,
வானிலை நிலவரங்கள், காற்றின் தரம், தீ அபாயப் பகுதிகள், காடு, சதுப்பு நிலங்களில் ஏற்படும் தீ அபாயங்கள், மாநிலத்தின் நீர் விநியோக ஆதாரங்களின் நிலை ஆகியவை சம்பந்தப்பட்ட முகமைகளுடன் இணைந்து தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2026, 6:47 pm
தாபோங் ஹாஜி, பெல்டா மீதான அரசு விசாரணை ஆணையம்; அரசியல் பழிவாங்கல் அல்ல: பிரதமர்
August 20, 2026, 6:46 pm
கோத்தா டாமன்சாராவில் கட்டப்படவிருந்த தரவு மையத் திட்டம் ஒத்திவைப்பு: டத்தோஶ்ரீ ரமணன்
August 20, 2026, 6:44 pm
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எண்ணெய் பூஜை எண்ணெயாக மாறுகிறது
August 20, 2026, 6:42 pm
பெர்லிஸ் மாநிலத்தில் வீரகாளியம்மன் ஆலயம் உடைப்பு: பொது இயக்கங்கள் கண்டனம்
August 20, 2026, 5:42 pm
AUKU சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை: இந்த ஆண்டிற்குள் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்
August 20, 2026, 5:37 pm
பேராக் மாநில மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் ராஜினாமா: சராணி முஹம்மத் உறுதிப்படுத்தினார்
August 20, 2026, 5:23 pm
