செய்திகள் மலேசியா
தாபோங் ஹாஜி, பெல்டா மீதான அரசு விசாரணை ஆணையம்; அரசியல் பழிவாங்கல் அல்ல: பிரதமர்
கோலாம்பூர்:
தாபோங் ஹாஜி, பெல்டா மீதான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த விசாரணையானது, அரசியல் பழிவாங்கும் நோக்கத்தால் தூண்டப்படவில்லை.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.
விசாரணை அமைப்புகள், சட்டத்துறை தலைவர் அதிகார வரம்பிற்கு உட்பட்டிருப்பதால், விசாரணையிலோ அல்லது வழக்குத் தொடரும் முடிவிலோ அரசாங்கம் தலையிடாது.
ஒரு வழக்கை விசாரிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு போலிஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கும் உள்ளது.
வழக்குத் தொடரும் முடிவு சட்டத்துறை தலைவரின் கையில் உள்ளது என்று அவர் கூறினார்.
ஒரு விசாரணையை நடத்த வேண்டுமா என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்? அது போலிஸ், எம்ஏசிசி ஆகிய விசாரணை அமைப்புகளின் கையில் உள்ளது.
வழக்குத் தொடர்வதா இல்லையா என்பதை யார் தீர்மானிக்கிறார்? அது சட்டத்துறை தலைவரின் முடிவு. தண்டனையை யார் நிர்ணயிக்கிறார்? நீதிபதி. பிரதமரல்ல என்று கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2026, 6:47 pm
புகைமூட்டம்: சரவாக்கில் 591 பள்ளிகள் இன்றும் நாளையும் மூடப்பட்டன
August 20, 2026, 6:46 pm
கோத்தா டாமன்சாராவில் கட்டப்படவிருந்த தரவு மையத் திட்டம் ஒத்திவைப்பு: டத்தோஶ்ரீ ரமணன்
August 20, 2026, 6:44 pm
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எண்ணெய் பூஜை எண்ணெயாக மாறுகிறது
August 20, 2026, 6:42 pm
பெர்லிஸ் மாநிலத்தில் வீரகாளியம்மன் ஆலயம் உடைப்பு: பொது இயக்கங்கள் கண்டனம்
August 20, 2026, 5:42 pm
AUKU சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை: இந்த ஆண்டிற்குள் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்
August 20, 2026, 5:37 pm
பேராக் மாநில மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் ராஜினாமா: சராணி முஹம்மத் உறுதிப்படுத்தினார்
August 20, 2026, 5:23 pm
