செய்திகள் மலேசியா
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எண்ணெய் பூஜை எண்ணெயாக மாறுகிறது
கோலாலம்பூர்:
மானிய விலையிலான பாக்கெட் சமையல் எண்ணெயை, பூஜை எண்ணெயாக மாற்றி பாட்டில்களில் அடைத்து விற்கும் ஒரு கும்பல் தலைநகரைச் சுற்றி நடத்தப்பட்ட நான்கு சோதனைகளில் அம்பலமானது.
கோலாலம்பூர் உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் 'ஆபரேஷன்ஸ் டிரிஸ் 4.0' மூலம் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய மூன்று வழக்குகள் கண்டறியப்பட்டது.
மேலும் கிட்டத்தட்ட 165,000 ரிங்கிட் மதிப்புள்ள சுமார் ஒன்பது டன் சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
கோலாலம்பூர் உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் துணை இயக்குநர் முகமது ஷஹ்ரான் முகமது அர்ஷாத் இதனை கூறினார்.
இந்த நடவடிக்கையில் செந்துல், சௌ கிட் ஆகிய பகுதிகளில் உள்ள நான்கு வளாகங்கள், இரண்டு உரிமம் பெற்ற மொத்த விற்பனை வளாகங்கள் மற்றும் இரண்டு உரிமம் பெறாத வளாகங்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.
மொத்த விற்பனையாளர்களிடமிருந்து ஒரு கிலோகிராம் பாக்கெட்டுகளில் மானிய விலையில் சமையல் எண்ணெயை வாங்கி, பின்னர் அந்தப் பாக்கெட்டுகளை வெட்டி மீண்டும் பாட்டில்களில் அடைப்பதே இந்தக் கும்பலின் தந்திரமாகும்.
பின்னர் அந்த எண்ணெய், ஒன்று, இரண்டு, ஐந்து முதல் 15 கிலோ வரையிலான அளவுகளில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள சில்லறை சந்தைக்காக, மற்ற பொருட்கள் இல்லாமலோ அல்லது சிறிதளவு சேர்க்கைப் பொருட்களுடனோ பூஜை எண்ணெய் என்று விற்கப்படுகிறது என்று அவர் இன்று கூறினார்.
இதில் சம்பந்தப்பட்ட கும்பல், ஒரு லிட்டர் மானிய சமையல் எண்ணெயை 2.45 ரிங்கிட் என்ற விலையில் வாங்கி, பின்னர் அதை ஒரு லிட்டர் சுமார் 7.50 ரிங்கிட் என்ற விலையில் மறுவிற்பனை செய்ததாக முகமது ஷாரன் கூறினார்.
ஒரே ஒரு வளாகத்தால் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 200 பாட்டில்கள் அல்லது கிட்டத்தட்ட ஒரு டன் மானிய சமையல் எண்ணெயைப் பதப்படுத்த முடியும் என்றும், கடந்த ஆறு மாதங்களாக இது சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருவதாகவும் நம்பப்படுவதாக அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையில், 30 முதல் 35 வயதுக்குட்பட்ட ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் மூன்று இந்தியர்கள், ஒரு இலங்கையர், வேன் ஓட்டுநராகப் பணிபுரிந்த ஒரு உள்ளூர்வாசி ஆகியோர் அடங்குவர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2026, 6:47 pm
தாபோங் ஹாஜி, பெல்டா மீதான அரசு விசாரணை ஆணையம்; அரசியல் பழிவாங்கல் அல்ல: பிரதமர்
August 20, 2026, 6:47 pm
புகைமூட்டம்: சரவாக்கில் 591 பள்ளிகள் இன்றும் நாளையும் மூடப்பட்டன
August 20, 2026, 6:46 pm
கோத்தா டாமன்சாராவில் கட்டப்படவிருந்த தரவு மையத் திட்டம் ஒத்திவைப்பு: டத்தோஶ்ரீ ரமணன்
August 20, 2026, 6:42 pm
பெர்லிஸ் மாநிலத்தில் வீரகாளியம்மன் ஆலயம் உடைப்பு: பொது இயக்கங்கள் கண்டனம்
August 20, 2026, 5:42 pm
AUKU சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை: இந்த ஆண்டிற்குள் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்
August 20, 2026, 5:37 pm
பேராக் மாநில மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் ராஜினாமா: சராணி முஹம்மத் உறுதிப்படுத்தினார்
August 20, 2026, 5:23 pm
