நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய தினத்திற்கு முன்னதாக இஹ்சான் ரஹ்மா 9.9 இணையவழி விற்பனை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர்:

2026 மலேசிய தினத்தை முன்னிட்டு, செப்டம்பர் 9 அன்று அரசாங்கம் இஹ்சான் ரஹ்மா 9.9 இணையவழி விற்பனையைத் தொடங்குகிறது.

இந்த விற்பனையின் மூலம் அதிகமான மக்கள் பயனடைவதை உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் இந்த முயற்சி செயல்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

"இது 34.5 மில்லியன் மலேசியர்களுக்கான விரிவான ஆதரவின் அடையாளமாகும்," என்று இன்று இங்கு நடைபெற்ற டிக்டாக் ஷாப் சம்மிட் மலேசியாவைத் தொடங்கி வைத்த பிறகு அவர் கூறினார்.

முதல் முறையாக இணையவழியில் நடத்தப்படும் இந்த விற்பனை, மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளை நியாயமான விலையில் பெற உதவும் என்று அன்வார் கூறினார்.

நல்ல பொருளாதார வளர்ச்சி புள்ளிவிவரங்களைத் தொடர்ந்து, கல்வி, சுகாதாரம், அடிப்படை உள்கட்டமைப்பு, வாழ்க்கைச் செலவு ஆகியவற்றில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது உட்பட, மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset