நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்துக்களுக்கு தைப்பூசம் முக்கிய பண்டிகை: பிரதமர் வாழ்த்து

புத்ராஜெயா:

தைப்பூசத்தையொட்டி, மலேசியாவில் உள்ள இந்துக்களுக்கு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அனைவரும் தங்கள் குடும்பத்தார் மற்றும் சமூகத்துடன் பாதுகாப்பாக  இப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

மலேசியா பல்வேறு இன, மதங்களைக் கொண்ட நாடாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்றும், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பரஸ்பர மரியாதை இந்நாட்டில் நிலவுகிறது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இந்த அம்சங்கள்தான் மலேசிய குடும்பத்துக்கு வலு சேர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் உள்ள இந்து பெருமக்களுக்கு தைப்பூசம் மிக முக்கியமான பண்டிகை என்றும், தை மாதத்தில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றும் தெரிவித்துள்ள பிரதமர், தமிழ் நாள்காட்டியில் தை, பத்தாவது மாதமாக வருகிறது எனக் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு தைப்பூசத்துக்கு என SOPக்கள் வகுக்கப்பட்டுள்ளன. புதிய கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தைப்பூசத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset