நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் பெர்சத்து கட்சியைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும்: நெகிரி செம்பிலான் பெர்சத்து ஆதரவு 

சிரம்பான்: 

டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் பெர்சத்து கட்சியைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் 

நெகிரி செம்பிலான் பெர்சத்து தரப்பு டான்ஶ்ரீ மொஹைதீனுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். 

அடுத்த 16ஆவது பொதுத்தேர்தலைப் பெர்சத்து கட்சி எதிர்கொள்ள டான்ஶ்ரீ மொஹைதீன் யாசினின் வழிகாட்டுதல்கள் அவசியமாகிறது. 

இதன் காரணமாக, அவருக்குப் பிளவுப்படாத ஆதரவு வழங்கப்படும் என்று நெகிரி செம்பிலான் பெர்சத்து கட்சியின் தலைவர் ஹனிஃபா அபு பக்கார் கூறினார். 

மொஹைதீன் யாசின் தலைமைத்துவத்தை ஆதரிப்பதால் பெர்சத்து, பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிகளுக்கு இடையில் ஒற்றுமை மேலோங்க செய்யப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார். 

பெர்சத்து கட்சியின் நடப்பு தேசிய தலைவராக டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் செயல்பட்டு வருகிறார். பெர்சத்து கட்சி தேசிய கூட்டணியின் கீழ் அங்கம் வகிக்கும் ஓர் அரசியல் கட்சியாகும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset