நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடன் பிரச்சினை காரணமாக ஆடவர் கொலை; தந்தை, மகன் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்

அம்பாங்:

கடன் பிரச்சினை காரணமாக ஆடவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்  தந்தை, மகனை போலி சார் கைது செய்தனர்.

அம்பாங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் முகமது அசாம் இஸ்மாயில் இதனை கூறினார்.

கடந்த ஜூன் 22 ஆம் தேதி தனது வீட்டில் ஆடவர் ஒரு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்தம சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்பட்ட ஒரு தந்தையும் மகனும் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு கடன் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

 இ-ஹெய்லிங் டிரைவராக பணிபுரிந்த பாதிக்கப்பட்ட ஆடவர் லட்சக்கணக்கான ரிங்கிட் கடன்பட்டிருந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இக்கொலை சம்பவத்தின் விசாரணைக்கு உதவுவதற்காக போலிசார் ஜூன் 26 அன்று 36, 73 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்டவர் 36 வயது சந்தேக நபரின் நண்பர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset