நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதித்துறையில் நெருக்கடி நிலை இல்லை; நீதித்துறை நியமனங்களைத் தற்காத்து பேசியது AGC அலுவலகம்: தேசிய சட்டத்துறை அலுவலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது 

கோலாலம்பூர்: 

நீதித்துறையில் சர்ச்சைகள் என்றும் நீதிபதிகள் நியமனங்கள் குறித்து அரச விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற அறைகூவல்கள் தொடர்பாக தேசிய சட்டத்துறை அலுவலகம் AGC விளக்கம் அளித்துள்ளது. 

அரச விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற வலியுறுத்தலை AGC தரப்பு நிராகரிப்பதாகவும் நீதித்துறையில் எந்தவொரு சர்ச்சைகளும் இல்லை என்றும் நீதிபதிகள் நியமனங்களிலும் யாருடைய தலையீடும் இல்லை என்று விவரித்தது 

நீதிபதிகளின் நியமனங்கள் யாவும் கூட்டரசு அரசியலமைப்பு சாசனத்தின் கீழ் முறையாக மேற்கொள்ளப்பட்டது. 

இதற்கு மாறாக, நீதித்துறையில் சர்ச்சை அல்லது நெருக்கடி என்று சொல்லப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும் என்று அவர் கூறியது. 

கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் 122Bஇன் கீழ் மேல்நிலை நீதிமன்றத்தின் நீதிபதிகளை மாட்சிமை தங்கிய மாமன்னர் நியமிப்பார். அவர் பிரதமரின் ஆலோசனையைப் பெற்ற பிறகும் மலாய் ஆட்சியாளர்களிடம் கூட்டத்தை நடத்திய பிறகும் இந்த முடிவு எடுப்பார் என்று சட்டம் வரையறுக்கிறது. 

2007ஆம் ஆண்டு வி கே லிங்கம் உட்படுத்திய வழக்கை ஒப்பிட்டு ரஃபிசி ரம்லி குறிப்பிட்டது ஏற்புடையதாக இல்லை. நாட்டின் நீதித்துறையின் மாண்பை நிலைநாட்டுவதில் அனைத்து தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று AGC கேட்டுக்கொண்டது. 

நாட்டின் இடைக்கால தலைமை நீதிபதியாக மலாயா நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக செயல்பட்டு வரும் ஹஸ்னா ஹஷிம் செயல்பட்டு வருகிறார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset