நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நியத் தொழிலாளர்கள் இல்லாமல் போகும் சவால்களை எதிர்கொள்ள தொழில் நிறுவனங்கள் தயாராக வேண்டும்: சிவக்குமார்

சுபாங்ஜெயா:

அந்நியத் தொழிலாளர்கள் இல்லாமல் போகும் சவால்களை எதிர்கொள்ள தொழில் நிறுவனங்கள் தயாராக வேண்டும்.

அலெரான் தொழில் நுட்ப நிறுவனத்தின் தலைமை இயக்குநர் சிவக்குமார் சுப்பிரமணியம் இதனை கூறினார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக அலெரான் தொழில் நுட்ப நிறுவனம் சுபாங்ஜெயாவில் செயல்பட்டு வருகிறது.

தொழிற் துறை நிறுவனங்கள் தொடர்பான பல வேலைகளை அலெரான் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தான் நாட்டில் தொழில் புரட்சி 4.0, 5.0 பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக் விவகாரங்களும் பெரும் தாக்கமாக உள்ளது

அதே வேளையில் மலேசியா  2030ஆம் ஆண்டு முழுமையாக அந்நியத் தொழிலாளர்கள் இல்லாதா நாடாக மாற வேண்டும் என்ற இலக்கையும் அரசாங்கம் கொண்டுள்ளது.

ஆக இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள தொழில் நிறுவனங்கள் தயாராக வேண்டும் என்ற நோக்கில் தான் அலெரான் ரோபோட்டிக் துறையில் கால் பதித்தது.

இதன் வாயிலாக கண்ட வெற்றியை தொடர்ந்து ரோபோட்டிக் துறை இந்திய இளைஞர்களுக்கு போதிக்க வேண்டும் என்ற முயற்சியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

எம்ஐடிஎப் ஆதரவுடன் இந்திய இளைஞர்கள் குறிப்பாக மாணவர்களுக்கு இப்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

எதிர்காலத்தில் மிகப் பெரிய வாய்ப்புகளை கொண்டுள்ள செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக் துறைகளின் இந்திய இளைஞர்களும் சாதிக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம் என்று சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset