நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசியான் உச்சநிலை மாநாடு வரலாறு படைக்கும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தகவல் 

ரியோ டிஜெனெய்ரோ:

2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாடு என்பது மிகுந்த கொண்டாட்டங்கள் நிறைந்த அதிகமான நாடுகள் பங்கெடுக்கக்கூடிய மாநாடாக வரலாறு படைக்கும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

இதுவரை ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளாத நாடுகளும் இம்முறை மாநாட்டில் கலந்து கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று பிரதமர் அன்வார் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். 

தான் பயணம் மூன்றில் இரு நாடுகள் இந்த முறை ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, இத்தாலி பிரதமர் மெலோனி ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். அதுமட்டுமல்லாமல், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் நாட்டு தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். 

2025ஆம் ஆண்டு மலேசியா ஆசியான் தலைவர் பொறுப்பினை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset