நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண் பக்தரிடம் காமச் சேட்டை புரிந்த பூசாரிக்கு எதிராக சமூக ஊடங்கங்களில் கடும் கண்டனம்

சாலாக் திங்கி:

பெண் பக்தரிடம் காமச் சேட்டை புரிந்த பூசாரிக்கு எதிராக சமூக ஊடங்கங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

கடந்த ஜூன் 21ஆம் தேதி பிரபலமான அப்பெண் சாலாக் திங்கியில் உள்ள  ஆலயத்திற்கு சென்றுள்ளார்.

தாயார் இந்தியாவுக்கு சென்றதால் அவர் தனியாக அவ்வாலயத்திற்கு சென்றுள்ளார்.

வழக்கமாக செல்லும் ஆலயம், அடிக்கடி பார்க்கும் பூசாரிகள் என்ற அடிப்படையில் அவர் அங்கு சென்றுள்ளார்.

வழிபாடுகள் குறித்து அதிகம் தெரியாததால் அது குறித்து விளக்கமளிக்கும் பூசாரிகளை அவர் மதித்துள்ளார்.

இந்நிலையில் என்னிடம் புனித நீர் உள்ளது. வழிபாட்டிற்கு பின் என்னை வந்து பாரு என அப்பூசாரி கூறியுள்ளார்.

இறைவனை வணங்கிய பின் அப்பூசாரியை அவர் சந்தித்துள்ளார். அப்போது பூசாரி அவர் மீது புனித நீரை தெளித்ததுடன் எதையோ முனுமுனுத்துள்ளார்.

இந்நிலையில் தான் அப்பூசாரி அப்பெண்ணிடம் அவர் காமச் சேட்டை புரிந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் அவ்விடத்தை விட்டு வெளியே சென்றுள்ளார்.

அப்போது அந்த பூசாரி இந்த வாரம் உனக்கு அதிர்ஷ்டமான வாரமாக இருக்கும். அதை தான் நான் செய்துள்ளேன் என்றுள்ளார்.

இந்த சம்பவத்தால் அப்பெண் அதிர்ச்சியில் மூழ்கியிருந்தார்.

கடந்த ஜூலை 4ஆம் தேதி நாடு திரும்பிய தாயாரிடம் அப்பெண் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

உடனே அவர் தந்தை, சகோதரர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து அவர் போலிசில் புகார் செய்ததுடன் சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகத்தையும் சந்தித்து புகார் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட பூசாரி மீது ஏற்கெனவே பல புகார்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனக்கு நேர்ந்த கொடுமையை அப்பெண் முழுமையாக சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில் நான் பல இடங்களுக்கு தனியாக சென்றுள்ளேன். ஆனால் ஆலயத்தில் இதுபோன்று நடந்தது பெரும் வேதனையை அளிக்கிறது.

அதே வேளையில் பெண்கள் எல்லா நேரமும் விழிப்புடன்  இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் பாதிப்பட்ட அப்பெண்ணுக்கு சமூக ஊடக பயனர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சம்பந்தப்பட்ட பூசாரியின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset