நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் அன்வாரின் மூன்று நாடுகளுக்கான அரசு முறை பயணம் பலன் அளித்துள்ளன 

ரியோ டிஜெனெய்ரோ: 

கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அவர் தம் குழுவினர்கள் இத்தாலி, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டனர். 

மூன்று நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த பயணமானது பலன் அளித்துள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

முதலீடு, வர்த்தகத்தை மட்டும் ஈர்க்காமல் அந்த மூன்று நாடுகளுடன் பன்முக ஒத்துழைப்பும் நல்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

மேலும், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அந்த மூன்று நாடுகளிடம் மலேசியா அதன் நிலைப்பாட்டினை விவரித்ததாக அவர் சொன்னார். 

பிரான்ஸ், இத்தாலி ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தனர். 

கூடுதலாக, 17ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பன்முக வர்த்தக நடவடிக்கையை மேலோங்க செய்ய வேண்டும் என்பதே மலேசியாவின் விருப்பம் என்று அவர் குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset