நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது என்பது தவறான ஓர் அணுகுமுறையாகும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடல் 

கோலாலம்பூர்: 

அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டாக இணைந்து ஈரான் மீது பலம் வாய்ந்த தாக்குதலை நடத்தியது ஒரு தவறான அணுகுமுறையாகும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார். 

இந்த நடவடிக்கையினால் இரு நாடுகளுக்கும் இடையிலான அரச தந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு ஈரானின் நாட்டு மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளதாக அவர் கூறினார். 

காசாவில் அமைதியை நிலைநாட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இந்த பேச்சுவார்த்தையானது நியாயமாகவும் விவேகமாகவும் கையாளப்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் FRANCE 24 தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் இவ்வாறு தெரிவித்தார். 

ஈரான் அனுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. காசா மக்களுக்கு முறையாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset