நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியாவின் ஃப்ளோரெஸ் வட்டாரத்தில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது 

கோலாலம்பூர்: 

இந்தோனேசியா நாட்டின் ஃப்ளோரெஸ் வட்டாரத்தில் இன்று காலை வேளையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு செய்யப்பட்டது என்றும் காலை 6.45 மணிக்கு இந்த நிலநடுக்கம் நிகழ்ந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது 

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 8.2 டிகிரி தெற்கு மற்றும் 120.6 டிகிரி கிழக்கு ஆகிய ஆயக்கூறுகளில், 52 கிலோமீட்டர் (கிமீ) ஆழத்தில் கண்டறியப்பட்டது.

இருப்பினும், இந்தோனேசியாவில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று மெட் மலேசியா உறுதிப்படுத்தியது. 

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஃப்ளோரெஸ் வட்டாரத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset