செய்திகள் மலேசியா
நாட்டிலுள்ள நான்கு மாநிலங்களில் காற்றின் தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
கோலாலம்பூர்:
நாட்டிலுள்ள சரவாக், சிலாங்கூர், கெடா மற்றும் பினாங்கு ஆகிய நான்கு மாநிலங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மலேசிய காற்று மாசுபாட்டு குறியீட்டு முறையின் (APIMS) தரவுகள் மூலம் இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சரவாக் மாநிலத்தில் அதிகபட்சமாக ஐந்து பகுதிகள் மோசமான காற்றுத் தரத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் செரியான் மாவட்டக் காவல் தலைமையகப் பகுதி 188 எனும் மிக உயர்ந்த குறியீட்டுப் பதிவைக் கொண்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் ஜொஹான் செத்தியா பகுதி 161 எனும் காற்றுத் தரக் குறியீட்டை எட்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து கோலா சிலாங்கூர் பகுதி 128 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கெடா மாநிலத்தில் சுங்கை பட்டாணி பகுதி 155 எனும் அளவில் காற்றுத் தரப் பதிவை எதிர்நோக்கியுள்ளது.
மேலும் அலோர் செடார் பகுதி 145 எனும் புள்ளிகளுடன் ஆரோக்கியமற்ற பட்டியலில் சேர்ந்துள்ளது.
பினாங்கு மாநிலத்தில் காற்றின் தரம் 134 ஆகப் பதிவாகி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 58 பகுதிகள் மிதமான காற்றுத் தர நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்காற்றின் தரக் குறியீட்டுத் தரவுகள் ஒவ்வொரு மணி நேரமும் அதிகாரப்பூர்வமாகப் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
காற்றுத் தரக் குறியீடு 0 முதல் 50 வரை நல்ல நிலையையும், 51 முதல் 100 வரை மிதமான நிலையையும், 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற நிலையையும் குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 11:45 am
இரும்பு கம்பியால் அண்டை வீட்டுக்காரரைத் தாக்கிய நபர்: 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 24, 2026, 11:26 am
ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தய விவகாரம்: 8 பேர் கைது
August 24, 2026, 10:55 am
செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் அதிகாலையில் தீ விபத்து: ஓர் ஆடவர் பாதிக்கப்பட்டார்
August 23, 2026, 9:23 pm
புகைமூட்டத்தால் ஆஸ்துமா, சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன
August 23, 2026, 9:22 pm
