நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் அதிகாலையில் தீ விபத்து: ஓர் ஆடவர் பாதிக்கப்பட்டார் 

கோலாலம்பூர்:

தலைநகர், செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் உள்ள ஜாலான் இஸ்மாயில் கானியில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஒன்று  நிகழ்ந்தது. 

இந்த தீ விபத்தில் மூன்று குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின என்று கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப்படை தரப்பு தெரிவித்தது. 

தீ விபத்தினால் உடலிலும் காலிலும் பலத்த தீக்காயமடைந்த 26 வயதுடைய இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவசர அழைப்பு கிடைத்தவுடன்  செந்தூல், ஹாங் துவா &  தெற்கு கோம்பாக் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த மீட்பு நடவடிக்கையில் 28 தீயணைப்பு வீரா்கள் தீவிரமாக ஈடுபட்டதாகக் கோலாலம்பூர் தீயணைப்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் அகமத் முக்லிஸ் முக்தார் தெரிவித்துள்ளார்

இந்தத் தீவிபத்து ஏற்பட்டது எவ்வாறு என்பது குறித்தும், அதற்கான மூலக்காரணம் என்ன என்பது குறித்தும் தீயணைப்புத் துறையின் தடயவியல் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset