நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

LRT இரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: 43 வயது வெளிநாட்டவர் கைது 

கோலாலம்பூர்: 

கடந்த வாரம் LRT இரயில் பயணத்தின் போது 25 வயது பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின் பேரில் 43 வயதுடைய வெளிநாட்டவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி வாங்சா மாஜு நிலையத்திலிருந்து பாசார் செனி நோக்கி பயணித்தபோது இச்சம்பவம் நடந்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார் என்று அம்பாங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் கைருல் அனுவார் கூறினார். 

ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அந்த சந்தேகநபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பின்புறமாகத் உரசி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் காவல் துறையில் புகார் அளித்ததன் பேரில் உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது

இச்சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவும் வகையில், சந்தேகநபர் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டத் தொகுப்பின் பிரிவு 354-இன் கீழ், ஒரு பெண்ணின் கற்புக்குக் பங்கம் விளைவிக்கும் நோக்கில் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset