செய்திகள் மலேசியா
ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தய விவகாரம்: 8 பேர் கைது
ஜொகூர் பாரு:
ஜொகூர் மாநிலத்தின் இரண்டாவது பாலமான லிங்கெடுவா நெடுஞ்சாலையை மறித்து சட்டவிரோத மோட்டார் பந்தயம் நடத்த்இய விவகாரம் தொடர்பாக 8 பேரைப் போலிஸ் கைது செய்தது
விசாரணைக்கு உதவும் வகையில் போலிஸ் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 117இன் கீழ் போலிஸ் மேற்கொண்ட தடுப்பு காவல் விண்ணப்பத்திற்கு மாஜிஸ்டிரெட் ஆர். சாலினி அனுமதி வழங்கினார்.
இந்த குற்ற சம்பவமானது 1987 சாலை போக்குவரத்து சட்டத்தின் செக்ஷன் 42(1) இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது
முன்னதாக, இன்று காலை 8.30 மணிக்கு அனைத்து சந்தேக நபர்களும் கூலாய் நீதிமன்ற வளாகத்திற்கு போலிசாரால் அழைத்து வரப்பட்டனர்.
அனைத்து சந்தேக நபர்களும் நேற்று காலை 11.54 மணிக்கு கூலாய் மாவட்ட சாலை போக்குவரத்து பிரிவு போலிஸ் அதிகாரிகளால் கைது செய்ய்யப்பட்டனர் என்று ஜொகூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹாமான் உறுதிப்படுத்தினார்.
லிங்கெடுவா நெடுஞ்சாலையை மறித்து சட்டவிரோத பந்தயத்தை நிகழ்த்தியதாக கூறப்படும் 33 வினாடிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது
இந்த சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கண்டனத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:55 pm
சுபாங் ஜெயா கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: 10 பேர் காயம்
August 24, 2026, 11:45 am
இரும்பு கம்பியால் அண்டை வீட்டுக்காரரைத் தாக்கிய நபர்: 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 24, 2026, 10:55 am
செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் அதிகாலையில் தீ விபத்து: ஓர் ஆடவர் பாதிக்கப்பட்டார்
August 24, 2026, 10:27 am
நாட்டிலுள்ள நான்கு மாநிலங்களில் காற்றின் தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
August 23, 2026, 9:23 pm
புகைமூட்டத்தால் ஆஸ்துமா, சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன
August 23, 2026, 9:22 pm
