செய்திகள் மலேசியா
சுபாங் ஜெயா கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: 10 பேர் காயம்
சுபாங் ஜெயா:
சுபாங் ஜெயாவில் உள்ள கேளிக்கை பூங்கா ஒன்றில் சனிக்கிழமை இரவு ரோலர் கோஸ்டர் ரயில் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் லேசான காயங்களுக்கு மட்டுமே ஆளாகியுள்ளனர் என சுபாங் ஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை இரவு சுமார் 9.00 மணியளவில் இந்த விபத்து நேர்ந்தபோது, அந்த ரோலர் கோஸ்டர் ரயிலில் மொத்தம் 22 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அதில் 11 முதல் 44 வயதிற்குட்பட்ட உள்ளூர்வாசிகளும் வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர்கள் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்களை வழங்கும் பொதுமக்களின் அடையாளங்கள் முற்றிலும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 11:45 am
இரும்பு கம்பியால் அண்டை வீட்டுக்காரரைத் தாக்கிய நபர்: 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 24, 2026, 11:26 am
ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தய விவகாரம்: 8 பேர் கைது
August 24, 2026, 10:55 am
செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் அதிகாலையில் தீ விபத்து: ஓர் ஆடவர் பாதிக்கப்பட்டார்
August 24, 2026, 10:27 am
நாட்டிலுள்ள நான்கு மாநிலங்களில் காற்றின் தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
August 23, 2026, 9:23 pm
புகைமூட்டத்தால் ஆஸ்துமா, சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன
August 23, 2026, 9:22 pm
