செய்திகள் மலேசியா
பண்டமாரானில் உள்ள உணவகத்தில் ஆயுதங்களுடன் ரகளை: 5 பேர் கைது
கிள்ளான்:
கடந்த சனிக்கிழமை கிள்ளான் பண்டாமாரானில் உள்ள ஓர் உணவகத்தில் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து ஆடவர்களைப் போலிஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றிரவு 11 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில் இரு நபர்கள் சிலரால் தாக்கப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலிஸ் தலைவர் லிம் ஜிட் ஹுய் கூறினார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த இரு பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் முகம் மற்றும் மூக்கு ஆகிய பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட இருவரும் கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பினர்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 148இன் கீழ் இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து இன்னும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் காவல் துறையின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் அனைவரும் ஆகஸ்ட் 26 வரை மூன்று நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
தென் தாய்லாந்தில் தீவிரமடையும் கலவரம்: நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்
August 24, 2026, 3:44 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாளில் சிவசுப்பிரமணியம் டத்தோ விருது பெற்றார்
August 24, 2026, 3:07 pm
