நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரும்பு கம்பியால் அண்டை வீட்டுக்காரரைத் தாக்கிய நபர்: 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு 

ஜார்ஜ்டவுன்: 

அண்டை வீட்டுக்காரர் முதியவரை இரும்பு கம்பியால் தாக்கி படுகாயமடைய செய்த 62 வயது ஆடவரை விசாரணைக்காக 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

குற்றவியல் சட்டத்தின் செக்‌ஷன் 326இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது. இன்று தொடங்கி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சந்தேக நபர் தடுப்புக் காவலில் இருப்பார். 

மாஜிஸ்டிரெட் நூர்ஹானிசா சாகுல் ஹமித் இந்த தடுப்புக் காவலுக்கு அனுமதி அளித்தார். 

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட முதியவரின் கை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் பினாங்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வடகிழக்கு மாவட்ட போலிஸ் தலைவர் அப்துல் ரொசாக் முஹம்மத் கூறினார். 

முன்னதாக மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் முதியவரை தாக்கியதாக வீடியோ பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட பதிவுகளும்  வைரலானது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset