நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாநில தேர்தல்களின் வெற்றிகள் பொதுத் தேர்தல் வெற்றிக்கு உத்தரவாதம் அல்ல: ஜாஹித்

கோலாலம்பூர்:

ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, கூட்டணி அலட்சியமாக இருக்க வேண்டாம்.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை வலியுறுத்தினார். 

இந்த வெற்றிகள் அடுத்த பொதுத் தேர்தலில் அதே முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்று சொல்ல முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.

வாக்காளர்கள் எப்போதும் விசுவாசமாக இருப்பார்கள் என்று அரசியல் கட்சிகள் இனி கருத முடியாது என்பதே புதிய யதார்த்தம்.

வேட்பாளர்கள், அரசாங்கத்தின் செயல்பாடு, உள்ளூர் பிரச்சினைகள், பொருளாதார நிலைமைகள், அரசியல் கட்சிகளின் தீர்வு வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், அவர்கள் பொதுத் தேர்தல், மாநில தேர்தல், இடைத்தேர்தல்களுக்கு இடையே வெவ்வேறு தேர்வுகளைச் செய்ய முடியும்.

தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஜொகூர், நெகிரி செம்பிலானுக்குப் பிறகு: மலேசிய அரசியலின் புதிய இயக்கவியல் என்ற கருத்தரங்கில் அவர் இவ்வாறு கூறினார்.

இது இளைய தலைமுறையினரிடையே மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

முன்பு, இளைஞர்கள் எங்களை ஆதரிக்கவில்லை என்று கூறப்பட்டது. 

ஆனால் இப்போது, ​​பல வாக்குச்சாவடிகளில் இளம் வாக்காளர்கள் பிஎன் கட்சிக்குத் திரும்பி வந்திருப்பதை நாங்கள் காண்கிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset