செய்திகள் மலேசியா
போர்ட்டிக்சன் மஇகா தொகுதி இடை நீக்கம் செய்யப்பட்டது: டத்தோஸ்ரீ சரவணன் ஒருங்கிணைப்பாளராக நியமனம்
சிரம்பான்:
போர்ட்டிக்சன் தொகுதியை மறுசீரமைப்பதற்கு ஏதுவாக, அத்தொகுதியின் செயல்பாடுகளை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மஇகா இடை நீக்கம் செய்துள்ளது.
இந்த முடிவு மஇகா பொதுச் செயலாளர் டத்தோ எஸ். அனந்தன் அனுப்பிய ஆகஸ்ட் 18 தேதியிட்ட கடிதத்தின் மூலம் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லாசிமுக்குத் தெரிவிக்கப்பட்டது.
டத்தோ ஆனந்தன் அந்தக் கடிதத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தினார்.
மஇகா, மந்திரி புசாருக்கு ஒரு கடிதம் எழுதியதை நான் உறுதிப்படுத்துகிறேன் என்று அவர் சுருக்கமாகக் கூறினார்.
மஇகா மத்திய செயலவையின் தீர்மானத்தின் மூலம் இந்த இடைநீக்க முடிவு எடுக்கப்பட்டது.
மறுசீரமைப்பு காலம் முழுவதும் போர்ட்டிக்சன் தொகுதியின் அனைத்து அரசியல் விவகாரங்களையும் அலுவல் விஷயங்களையும் நிர்வகித்து ஒருங்கிணைப்பதற்காக, மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணனை அப்பிரிவின் ஒருங்கிணைப்பாளராக கட்சி நியமித்தது.
இந்த நியமனத்தின் மூலம், போர்ட்டிக்சன் தொகுதி மஇகா தொடர்பான அனைத்து விஷயங்கள், விவாதங்கள், தகவல் தொடர்புகள் பேச்சுவார்த்தைகள் நேரடியாக டத்தோஸ்ரீ சரவணனிடமே கொண்டு செல்லப்பட்டு, அவரிடமே அனுப்பப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் விளக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 3:07 pm
LRT இரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: 43 வயது வெளிநாட்டவர் கைது
August 24, 2026, 3:06 pm
பண்டமாரானில் உள்ள உணவகத்தில் ஆயுதங்களுடன் ரகளை: 5 பேர் கைது
August 24, 2026, 12:55 pm
சுபாங் ஜெயா கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: 10 பேர் காயம்
August 24, 2026, 11:45 am
இரும்பு கம்பியால் அண்டை வீட்டுக்காரரைத் தாக்கிய நபர்: 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 24, 2026, 11:26 am
ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தய விவகாரம்: 8 பேர் கைது
August 24, 2026, 10:55 am
செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் அதிகாலையில் தீ விபத்து: ஓர் ஆடவர் பாதிக்கப்பட்டார்
August 24, 2026, 10:27 am
