செய்திகள் மலேசியா
மானியங்கள் இல்லாத பெட்ரோல், டீசல் விலைகள் 10 முதல் 20 சென் வரை அதிகரித்துள்ளன
புத்ராஜெயா:
மானியங்கள் இல்லாத ரோம் 97 பெட்ரோல், ரோம் 95, டீசல் ஆகியவற்றின் சில்லறை விலைகள் ஒரு லிட்டருக்கு முறையே 10 சென் முதல் 20 சென் வரை அதிகரித்துள்ளன.
இது வரும் ஆகஸ்ட் 20 முதல் 26 வரை அமலில் இருக்கும்.
குறிப்பிட்ட இந்தக் காலகட்டத்திற்கு, ரோன் 97 பெட்ரோலின் விலை முன்பு 4.15 ரிங்கிட்டாக இருந்த நிலையில், தற்போது ஒரு லிட்டருக்கு 4.25 ரிங்கிட்டாகவும், மானியங்கள் இல்லாத ரோன் 95 பெட்ரோலின் விலை முன்பு 3.62 ரிங்கிட்டாக இருந்த நிலையில், தற்போது ஒரு லிட்டருக்கு 3.77 ரிங்கிட்டாகவும் உயரும்.
மேலு. மானியங்கள் இல்லாத டீசலின் விலை முன்பு 4.47 ரிங்கிட்டாக இருந்த நிலையில், தற்போது ஒரு லிட்டருக்கு 4.67 ரிங்கிட்டாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் பூடி 95 திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் ரோன் 95 பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 1.99 ரிங்கிட்டாகவும், பூடி டீசல் திட்டத்தின் கீழ் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு 2.10 ரிங்கிட்டாகவும் நீடிக்கிறது என நிதியமைச்சு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 3:07 pm
LRT இரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: 43 வயது வெளிநாட்டவர் கைது
August 24, 2026, 3:06 pm
பண்டமாரானில் உள்ள உணவகத்தில் ஆயுதங்களுடன் ரகளை: 5 பேர் கைது
August 24, 2026, 12:55 pm
சுபாங் ஜெயா கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: 10 பேர் காயம்
August 24, 2026, 11:45 am
இரும்பு கம்பியால் அண்டை வீட்டுக்காரரைத் தாக்கிய நபர்: 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 24, 2026, 11:26 am
ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தய விவகாரம்: 8 பேர் கைது
August 24, 2026, 10:55 am
செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் அதிகாலையில் தீ விபத்து: ஓர் ஆடவர் பாதிக்கப்பட்டார்
August 24, 2026, 10:27 am
