செய்திகள் மலேசியா
குடிநுழைவுத் துறை லோரி விபத்து: விசாரணை அறிக்கை நாளை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்
கோலாலம்பூர்:
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த, குடிநுழைவுத் துறை லோரி சம்பந்தப்பட்ட விபத்து குறித்த விசாரணை ஆவணங்கள், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் நோக்கத்திற்காக சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
வழக்கின் விசாரணை ஆவணங்களை அரசுத் தரப்பு ஆய்வு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கத் துறையின் தலைவர் சம்சுரி ஈசா தெரிவித்தார்.
விசாரணை ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், கோலாலம்பூர் மாநில வழக்கறிஞர் இயக்குநர், அந்த விசாரணை ஆவணங்களைப் புத்ராஜயாவில் உள்ள அரசுத் தலைமை வழக்கறிஞர் பிரிவின் பொதுக் குற்றம், பொது ஒழுங்குப் பிரிவின் தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு பரிந்துரைத்தார்.
எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் பரிசீலிக்கும் பொருட்டு, விசாரணை ஆவணங்கள் நாளை(ஆகஸ்ட் 20 அன்று அரசுத் தரப்பு இயக்குநரால், விசாரணை அதிகாரியுடன் நேரில் கொண்டுவரப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 3:07 pm
LRT இரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: 43 வயது வெளிநாட்டவர் கைது
August 24, 2026, 3:06 pm
பண்டமாரானில் உள்ள உணவகத்தில் ஆயுதங்களுடன் ரகளை: 5 பேர் கைது
August 24, 2026, 12:55 pm
சுபாங் ஜெயா கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: 10 பேர் காயம்
August 24, 2026, 11:45 am
இரும்பு கம்பியால் அண்டை வீட்டுக்காரரைத் தாக்கிய நபர்: 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 24, 2026, 11:26 am
ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தய விவகாரம்: 8 பேர் கைது
August 24, 2026, 10:55 am
செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் அதிகாலையில் தீ விபத்து: ஓர் ஆடவர் பாதிக்கப்பட்டார்
August 24, 2026, 10:27 am
