செய்திகள் மலேசியா
தேசியக் கொடியை வேண்டுமென்றே அவமதிப்பதை நிறுத்துங்கள்: டத்தோ லோகபாலா
ஜொகூர்பாரு:
தேசியக் கொடி, நெகராகூபாடல், தேசிய சின்னம், ருக்குன் நெகாரா போன்ற மலேசிய சின்னங்கள் என்று வரும்போது, கவனக்குறைவு, அலட்சியம் அல்லது அறியாமைக்கு இடமில்லை.
மரியாதைக்குரிய மலேசியாவின் சின்னங்களை அவமதிப்பதை ஒரு தற்செயலான தவறாகக் கருத முடியாது.
மலேசிய முற்போக்கு மக்கள் கட்சியின் (பிபிபி) தலைவர் டத்தோ டாக்டர் லோகா பால மோகன் இதனை கூறினார்.
தேசியக் கொடி, தேசிய கீதம், தேசிய சின்னம், மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற சின்னங்கள் அனைத்தும் ஒவ்வொரு மலேசியரின் பெருமையாகும்.
அவை மதிக்கப்பட வேண்டும், கௌரவிக்கப்பட வேண்டும். அவற்றுக்குரிய கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும்.
நமது தேசிய சின்னங்களை அவமதிக்கும் எந்தவொரு செயலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதை நாம் ஒருபோதும் சகித்துக்கொள்ளக் கூடாது.
சில கட்சிகள் நமது தேசிய சின்னங்களுக்கு இன்னும் மரியாதை அளிக்காமல் இருப்பதும், சில சமயங்களில் அவற்றை அவமதிக்கும் அல்லது மதிக்காத செயல்களை வேண்டுமென்றே செய்வதும் மிகவும் வருந்தத்தக்கது.
இதுபோன்ற நடத்தையை பொறுத்துக்கொள்ள முடியாது, பொறுத்துக்கொள்ளவும் கூடாது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 3:07 pm
LRT இரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: 43 வயது வெளிநாட்டவர் கைது
August 24, 2026, 3:06 pm
பண்டமாரானில் உள்ள உணவகத்தில் ஆயுதங்களுடன் ரகளை: 5 பேர் கைது
August 24, 2026, 12:55 pm
சுபாங் ஜெயா கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: 10 பேர் காயம்
August 24, 2026, 11:45 am
இரும்பு கம்பியால் அண்டை வீட்டுக்காரரைத் தாக்கிய நபர்: 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 24, 2026, 11:26 am
ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தய விவகாரம்: 8 பேர் கைது
August 24, 2026, 10:55 am
செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் அதிகாலையில் தீ விபத்து: ஓர் ஆடவர் பாதிக்கப்பட்டார்
August 24, 2026, 10:27 am
