நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிலதிபர் கொலை வழக்கு: நான்கு பேருக்கு எதிரான குற்றம் சாட்டப்பட்டது

பத்து பஹாட்: 

கடந்த மாத தொடக்கத்தில் தொழிலதிபர் ஒருவரை கொலை செய்து அவரது உடலை வலையில் சுற்றி ஆற்றி வீசியதாக சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர் மீது இன்று மாஜிஸ்டிரெட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்களில் லாரி ஓட்டுநரான யோகேஸ்வரன் சுப்ரமணியம் (40), லாரி உதவியாளர்களான லிம் யோங் மிங் (26), அச்சுதன் நாகராஜன் (32) மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகன வியாபாரியான ஹோ ஹான் வே (33) ஆகியோர் அடங்குவர்.

மாஜிஸ்திரேட் முஸ்தகீம் சுகார்னோ முன்னிலையில் இந்த குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, நான்கு குற்றவாளிகளும் அதனைப் புரிந்து கொண்டதாக தலை அசைத்தனர்.

இருப்பினும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், குற்றவாளிகளிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரையிலான கட்டத்தில் தாமான் ஶ்ரீ ஸ்கூடாயில் உள்ள ஆற்றுப்பகுதியில் லோ கை சியான் என்பவரைக் கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது, இதில் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்படும். 

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கை கால்கள் ஒட்டும் நாடாவால் கட்டப்பட்டும் உடம்பில் பல காயங்களுடனும் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மேலும், உடலை மூழ்குடிப்பதற்காக ஐந்து கற்களுடன் வலையில் சுற்றப்பட்டுக் கிடந்த நிலையில், கடன் தகராறே இந்த கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset