செய்திகள் மலேசியா
ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த ஆடவர் கைது: போலிஸ் நடவடிக்கை
கங்கார்:
ஃபேஸ்புக் சமூக ஊடகம் மூலம் நபர் ஒருவரை காயப்படுத்தும் நோக்கம் கொண்டு மிரட்டல் விடுத்து பதிவு செய்த ஆடவரைக் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 46 வயதான சந்தேக நபர் கெடா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று பெர்லிஸ் மாநில இடைக்கால போலிஸ் உதவி ஆணையர் ஜைஹைருல் இட்ருஸ் கூறினார்.
ஃபேஸ்புக் குழுப் பக்கம் ஒன்றில் பரவிய அச்சுறுத்தல் பதிவு தொடர்பாகவே அந்தப் புகார் அளிக்கப்பட்டது.
கைது நடவடிக்கையின் போது, இணையப் பதிவில் வைராலான வாள் ஒன்று, சந்தேகநபர் ஓட்டி வந்த வாகனத்தில் இருந்து போலிசாரால் கைப்பற்றப்பட்டது.
ஆயுதம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கு 1958-ஆம் ஆண்டின் அரிக்கும் பொருட்கள், வெடிபொருட்கள் மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் சட்டத்தின் பிரிவு 6(1)-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இணையத்தில் மிரட்டல் பதிவு பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக, குற்றவியல் சட்ட பிரிவு 507 மற்றும் 1998-ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக் சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 17, 2026, 5:44 pm
பெர்கேசோவின் I-LINDUNG ஊடக விருதுகள் 2026: ஊடகங்கள், பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு
August 17, 2026, 5:12 pm
PKR கட்சிக்கு மீண்டும் திரும்புகிறார் முன்னாள் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
August 17, 2026, 4:09 pm
சிப்பாங் F1 மடானி சிறப்பு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன
August 17, 2026, 3:52 pm
பகாங் மாநிலத்தின் கெந்திங் ஹைலண்டஸில் போதைப்பொருள் கும்பல் செயல்பாடா? போலிஸ் மறுப்பு
August 17, 2026, 3:38 pm
ஜாலூர் கெமிலாங் கொடியைத் தலைகீழாக பறக்கவிட்ட சம்பவம்: தொழிற்துறை வளாகம் தற்காலிகமாக மூடல்
August 17, 2026, 1:01 pm
