செய்திகள் மலேசியா
ஜாலூர் கெமிலாங் கொடியைத் தலைகீழாக பறக்கவிட்ட சம்பவம்: தொழிற்துறை வளாகம் தற்காலிகமாக மூடல்
கூலாய்:
ஜாலூர் கெமிலாங் கொடியைத் தலைகீழாக பறக்கவிட்ட சம்பவம் தொடர்பாக கூலாய் நகராட்சிக்கு உட்பட்ட தொழிற்துறை வளாகம் ஒன்று தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது.
நாட்டின் தேசிய கொடி தலைகீழாக பறக்கவிட்ட சம்பவம் அடங்கிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகம் அதிகாரப்பூர்வ விளக்கத்தை வழங்கி, உறுதிமொழி ஆவணத்தை (Aku Janji) நிறைவு செய்யும் வரை வளாகம் மூடப்பட்டிருக்கும் என ஜொகூர் மாநில வீடமைப்பு, உள்ளூராட்சி நிர்வாக செயற்குழு தலைவர் டத்தோ முஹம்மத் ஜஃப்னி முஹம்மத் ஷுகோர் கூறினார்.
இதற்கிடையில், தலைகீழாக இருந்த தேசியக் கொடி உடனடியாகச் சரியான முறையில் மாற்றி அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தேசிய இறையாண்மையின் அடையாளத்தை அவமதிக்கும் வகையிலான எந்தவொரு அலட்சியத்திற்கும் ஜொகூர் மாநில அரசு சமரசம் செய்யாது. இதுபோன்ற சம்பவங்களை சாதாரணமாகக் கருதவோ, தொடர்ந்து நடைபெற அனுமதிக்கவோ முடியாது,” என அவர் கடுமையாக எச்சரித்தார்.
மேலும், ஜொகூரில் உள்ள அனைத்து தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் வர்த்தக வளாகங்களின் உரிமையாளர்களும் ஜாலூர் கெமிலாங் கொடியை சரியான முறையிலும், முழுமையான பொறுப்புணர்வுடனும் ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 17, 2026, 5:44 pm
பெர்கேசோவின் I-LINDUNG ஊடக விருதுகள் 2026: ஊடகங்கள், பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு
August 17, 2026, 5:12 pm
PKR கட்சிக்கு மீண்டும் திரும்புகிறார் முன்னாள் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
August 17, 2026, 5:02 pm
ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த ஆடவர் கைது: போலிஸ் நடவடிக்கை
August 17, 2026, 4:09 pm
சிப்பாங் F1 மடானி சிறப்பு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன
August 17, 2026, 3:52 pm
பகாங் மாநிலத்தின் கெந்திங் ஹைலண்டஸில் போதைப்பொருள் கும்பல் செயல்பாடா? போலிஸ் மறுப்பு
August 17, 2026, 1:01 pm
