நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அலாம் கடல்சார் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான அஸ்மி அஹ்மத் MACC யால் தடுத்து வைக்கப்பட்டார். 

கோலாலம்பூர்: 

அலாம் கடல்சார் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான அஸ்மி அஹ்மத் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் தடுத்து வைக்கப்பட்டார். 

இதுதொடர்பாக Bursa Malaysia-விடம் தாக்கல் செய்த அறிக்கையில், அஸ்மி அகமது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பது மட்டுமே எந்தவொரு குற்றத்திலும் அவர் ஈடுபட்டதாக நிரூபிப்பதல்ல என நிறுவனத்தின் நிர்வாகக் குழு தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், குழுமத்தின் அன்றாட செயல்பாடுகள் எந்தவித பாதிப்பும் இன்றி தொடர்ந்து நடைபெற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டால் உரிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2006 மே 2ஆம் தேதி முதல் Alam Maritim Resources Bhd குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் CEOவாக அஸ்மி அகமது பதவி வகித்து வருகிறார்.

இதற்கிடையில், அலம் மரிட்டைம் நிறுவனத்துக்கும் Tabung Haji-க்கும் நீண்டகால வர்த்தகத் தொடர்புகள் இருப்பது மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset