நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிப்பாங் F1 மடானி சிறப்பு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன 

சிப்பாங்: 

சிப்பாங் அனைத்துலக பந்தய தளத்தில் அக்டோபர் 2 முதல் 4 வரை நடைபெறவுள்ள Gulf Air Bahrain Grand Prix F1 பந்தயத்திற்கான மடானி 
சிறப்பு டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.

மை கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்த சிறப்பு டிக்கெட்டுகளின் விலை RM200 முதல் RM2,083 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

விற்பனை தொடங்கிய உடனேயே ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டதால், SIC-ன் அதிகாரப்பூர்வ டிக்கெட் இணையதளத்தில் அதிகளவு இணையப் போக்குவரத்து ஏற்பட்டது.

டிக்கெட்டுகளுக்கான அதிகமான தேவையை கருத்தில் கொண்டு, மேலும் டிக்கெட்டுகளை வெளியிடுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் Taufiq தெரிவித்தார்.

இதுதொடர்பான புதிய தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset