செய்திகள் மலேசியா
பகாங் மாநிலத்தின் கெந்திங் ஹைலண்டஸில் போதைப்பொருள் கும்பல் செயல்பாடா? போலிஸ் மறுப்பு
குவாந்தான்:
பகாங் மாநிலத்தின் கெந்திங் ஹைலண்ட்ஸில் பெரிய அளவிலான போதைப்பொருள் கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் குற்றச்சாட்டை பகாங் போலிஸ் மறுத்துள்ளது.
எந்தவொரு பகுதியிலும் குற்றச் செயல்கள் தொடர்பான புகார் கிடைத்தவுடன் போலீசார் தொழில்முறையான முறையில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக பகாங் மாநில போலிஸ் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மர் அயோப் தெரிவித்தார்.
கெந்திங் ஹைலண்ஸ் அல்லது வேறு எந்த இடத்திலோ சட்டவிரோதச் செயல் தொடர்பாக போலீஸ் புகார் கிடைத்தால், நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அவர் கூறினார்.
பஹாங் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை (JPJKK) தலைவர் பதவிக்கான பொறுப்பேற்பு மற்றும் ஒப்படைப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 17, 2026, 5:44 pm
பெர்கேசோவின் I-LINDUNG ஊடக விருதுகள் 2026: ஊடகங்கள், பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு
August 17, 2026, 5:12 pm
PKR கட்சிக்கு மீண்டும் திரும்புகிறார் முன்னாள் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
August 17, 2026, 5:02 pm
ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த ஆடவர் கைது: போலிஸ் நடவடிக்கை
August 17, 2026, 4:09 pm
சிப்பாங் F1 மடானி சிறப்பு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன
August 17, 2026, 3:38 pm
ஜாலூர் கெமிலாங் கொடியைத் தலைகீழாக பறக்கவிட்ட சம்பவம்: தொழிற்துறை வளாகம் தற்காலிகமாக மூடல்
August 17, 2026, 1:01 pm
