நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெந்திங்மலையில் கொள்ளை: கிட்டத்தட்ட 1.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையர்கள் வெறும் இரண்டு நிமிடங்களில் திருடிச் சென்றனர்

பெந்தோங்:

கெந்திங்மலை ஸ்கை அவென்யூவில் உள்ள ஒரு நகைக் கடையில் கொள்ளையடித்த மூன்று நபர்கள், நகைகளை வெறும் இரண்டு நிமிடங்களில் திருடிச் சென்றுள்ளர்.

இந்த நிகழ்வை உறுதிப்படுத்திய பகாங் மாநில தற்காலிக காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மர் அயோப்,

இதுவரை அந்தக் குழுவால் திருடப்பட்ட நகைகளின் மதிப்பு கிட்டத்தட்ட 1.7 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்பு, அவர்கள் கெந்திங்மலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தில் ஏறுவதைக் கண்டதாக அவர் கூறினார்.

தொப்பிகள், முகமூடிகள் அணிந்து, கோடாரிகள், ஆயுதம் ஏந்தியிருந்த சந்தேக நபர்கள், கொள்ளையை நிகழ்த்துவதற்கு குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் எடுத்துக் கொண்டனர்.

கொள்ளையை நடத்திய உடனேயே, அவர்கள் அனைவரும் கெந்திங்மலையை விட்டு வெளியேறியதாக அவர் கூறினார்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை, பகாங் குற்ற புலனாய்வுப் பிரிவு, பெந்தோங் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றால் நடத்தப்பட்ட விசாரணைகள், உளவுத் தகவல்களின் அடிப்படையில், சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அஸ்ரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset