செய்திகள் மலேசியா
பெர்கேசோவின் I-LINDUNG ஊடக விருதுகள் 2026: ஊடகங்கள், பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு
கோலாலம்பூர்:
சமூக பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோவின் I-LINDUNG ஊடக விருதுகள் 2026க்கு ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்களும் தங்களின் படைப்புகளை அனுப்ப விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
சிக்கலான சமூகப் பாதுகாப்பு விவகாரங்களைத் தெளிவான மற்றும் சக்திவாய்ந்த கதைகளாக மாற்றும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பைக் கெளரவிப்பதே இந்த விருதின் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக, வேலைவாய்ப்பு காயம் மற்றும் வருமானப் பாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்தும் 'LINDUNG 24 Jam' (வேலை நேரத்திற்கு அப்பாற்பட்ட காயம் பாதுகாப்புத் திட்டம்) போன்ற புதிய திட்டங்கள் அமலுக்கு வந்துள்ள சூழலில், சமூகப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிப்பதே இத்திட்டத்தின் முதன்மை இலக்காகும்.
மலேசியப் பத்திரிகையாளர் கழகத்துடன் (MPI) இணைந்து நடத்தப்படும் இந்தப் போட்டியில், சிறந்த தொலைக்காட்சி மற்றும் காணொளி, வானொலி மற்றும் போட்காஸ்ட், அச்சு ஊடகம், இணையப் போர்ட்டல் மற்றும் புகைப்படக் கலை ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிப்பவருக்கு RM5,000, இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு RM2,000 மற்றும் மூன்றாம் இடம் பிடிப்பவருக்கு RM1,000 ரொக்கப் பரிசுடன் கோப்பைகளும் வழங்கப்படும்.
மேலும், இந்த ஆண்டின் மிகச் சிறந்த படைப்பிற்குச் சிறப்பு அங்கீகாரமாக ANUGERAH KENCANA PERKESO LINDUNG Semua விருதும் RM10,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என பெர்கேசோ அறிவித்துள்ளது.
சமூகப் பாதுகாப்பு விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஊடகங்களை ஒரு முக்கிய வியூகப் பங்காளியாகப் பெர்கேசோ கருதுவதாக பெர்கேசோவின் துணைத் தலைமை நிர்வாகி எட்மண்ட் சியோங் பெக் ஹுவாங்
குறிப்பிட்டார்.
இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் ஊடகவியலாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் தங்களது சொந்த மற்றும் அசல் படைப்புகளை வரும் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு நபர் வெவ்வேறான பிரிவுகளில் அதிகபட்சமாக இரண்டு படைப்புகளை மட்டுமே அனுப்ப முடியும். வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா வரும் நவம்பர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேலதிக விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை https://mpi.my/award/perkeso இணையதளத்தில் பெறலாம்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 17, 2026, 5:12 pm
PKR கட்சிக்கு மீண்டும் திரும்புகிறார் முன்னாள் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
August 17, 2026, 5:02 pm
ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த ஆடவர் கைது: போலிஸ் நடவடிக்கை
August 17, 2026, 4:09 pm
சிப்பாங் F1 மடானி சிறப்பு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன
August 17, 2026, 3:52 pm
பகாங் மாநிலத்தின் கெந்திங் ஹைலண்டஸில் போதைப்பொருள் கும்பல் செயல்பாடா? போலிஸ் மறுப்பு
August 17, 2026, 3:38 pm
ஜாலூர் கெமிலாங் கொடியைத் தலைகீழாக பறக்கவிட்ட சம்பவம்: தொழிற்துறை வளாகம் தற்காலிகமாக மூடல்
August 17, 2026, 1:01 pm
