செய்திகள் மலேசியா
ஆலயத்தின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது குறித்து 3 புகார்கள் பெறப்பட்டன: போலிஸ்
குவாந்தான்:
பெந்தோங் புக்கிட் திங்கியில் உள்ள ஆலயத்தின் சிலை ஒன்று சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக நேற்று போலிசாருக்கு மூன்று புகார்கள் கிடைத்தன.
பகாங் மாநில தற்காலிக போலிஸ் தலைவர் அஸ்ரி அக்மர் அயோப் இதனை கூறினார்.
நேற்று அதிகாலை 1.51 மணி, 2.32 மணி, மாலை 4.35 மணிக்கு 49 வயது பாதுகாப்பு ஊழியர், 45 வயது குருக்கள், 41 வயது உள்ளூர்வாசி ஆகியோர் இந்தப் புகார்களை அளித்ததாகக் கூறினார்.
போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணையில் ஆலயப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை தனது தரப்பு தீவிரமாகக் கருதுவதாகவும், குற்றச் சட்டத்தின் பிரிவு 295, 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ், இதற்கான காரணத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பினரையும் கண்டறிய விசாரணைகள் இன்னும் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
விசாரணையைப் பாதிக்கக்கூடிய அல்லது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தக்கூடிய யூகங்களையோ அல்லது தகவல்களையோ, குறிப்பாக சமூக ஊடகங்கள் வழியாக, பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான எந்தவொரு தகவலையும் விசாரணைக்கு உதவும் வகையில் போலிசாரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 17, 2026, 5:44 pm
பெர்கேசோவின் I-LINDUNG ஊடக விருதுகள் 2026: ஊடகங்கள், பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு
August 17, 2026, 5:12 pm
PKR கட்சிக்கு மீண்டும் திரும்புகிறார் முன்னாள் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
August 17, 2026, 5:02 pm
ஃபேஸ்புக்கில் மிரட்டல் விடுத்த ஆடவர் கைது: போலிஸ் நடவடிக்கை
August 17, 2026, 4:09 pm
சிப்பாங் F1 மடானி சிறப்பு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன
August 17, 2026, 3:52 pm
பகாங் மாநிலத்தின் கெந்திங் ஹைலண்டஸில் போதைப்பொருள் கும்பல் செயல்பாடா? போலிஸ் மறுப்பு
August 17, 2026, 3:38 pm
