நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மத விவகாரங்களில் சமூக ஊடகவியலாளர்கள் போலிஸ் அதிகாரிகளாக மாற வேண்டாம்: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

அதிகாரிகளால் இன்னும் விசாரணையில் உள்ள மத விவகாரங்கள் குறித்து, தாங்களாகவே முடிவுகளை எடுப்பதன் மூலமோ அல்லது தங்கள் சொந்தக் குற்றச்சாட்டுகளைப் பரப்புவதன் மூலமோ சமூக ஊடகவியலாளர்கள் போலிஸ் அதிகாரிகள் போல் செயல்பட வேண்டாம்.

உண்மையான விவரங்களைத் தெரிந்துகொள்ளாமல் ஊகங்கள் செய்வது நிலைமையை மேலும் மோசமாக்கி, சமூகத்தில் தவறான புரிதல்களை உருவாக்கக்கூடும் என்று  மஹிமா தலைவர் டத்தோ என். சிவக்குமார் கூறினார்.

பெந்தோங்கில் புக்கிட் திங்கியில் உள்ள ஆலயத்தில் இருந்த சிலை சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் பல்வேறு அனுமானங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இந்த விவகாரம் தெளிவாக நிகழ்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

என்னை பொறுத்தவரை, இணையவாசிகள் தெரிவித்த பெரும்பாலான கருத்துக்கள், சம்பவத்தின் உண்மையான காரணத்தைப் புரிந்துகொள்ளாமலும், அதிகாரிகளின் விசாரணை முடிவுகளுக்காகக் காத்திருக்காமலும், அவர்களின் சொந்தக் கண்ணோட்டங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன.

பொய்க் குற்றச்சாட்டுகள் போதும். பேச்சுரிமை என்பது வதந்திகளால் அல்ல, உண்மைகளால்தான் அமைய வேண்டும்  என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset