நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

PKR கட்சிக்கு மீண்டும் திரும்புகிறார் முன்னாள் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் 

கோலாலம்பூர்: 

PKR கட்சிக்கு மீண்டும் திரும்புகிறார் அக்கட்சியின் முன்னாள் உதவி தலைவராக இருந்த டாக்டர் சேவியர் ஜெயக்குமார் 

டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான PKR கட்சியில் இணைவதை டாக்டர் சேவியர் ஜெயக்குமார் உறுதி செய்தார். 

கட்சியில் ஓரங்கட்டப்பட்ட மூத்த தலைவர்கள் மீண்டும் கட்சிக்கு வந்து சீர்த்திருத்த போராட்டத்தைத் தொடருமாறு அன்வார் கேட்டுக்கொண்டதை அடுத்து அவர் தற்போது PKR கட்சியில் இணைகிறார். 

கடந்த 2021ஆம் ஆண்டு PKR கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அக்கட்சியிலிருந்து விலகினார். 

பின்னர் 2022-இல் 'பார்ட்டி பங்சா மலேசியா' (PBM) கட்சியில் இணைந்த அவர், அதற்கான காரணத்தை வெளிப்படுத்தவில்லை.

இதற்கிடையில், கட்சியின் மற்றொரு முன்னாள் உதவித் தலைவரான தியான் சுவாவும் மீண்டும் PKR கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக 'சுவாரா கெஅடிலான்' செய்தி தளம் தெரிவித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset