செய்திகள் வணிகம்
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
கோலாலம்பூர்:
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் பெர்ஹாட் நிறுவனம், கெச்சாரா சூப் கிச்சன் அமைப்புடன் இணைந்து ஜாலான் இம்பியில் உள்ள மையத்தை இரட்டைச் செயல்பாடு கொண்ட புதிய வசதியாக மாற்றியமைத்துள்ளது.
வணிக நிறுவனங்களின் அனுபவம் சமூக நன்மைக்கு உதவ வேண்டும் என்ற நம்பிக்கையில், சிக்னேச்சர் நிறுவனம் தனது வடிவமைப்பு, மேலாண்மைத் திறன்களை இதற்காகப் பயன்படுத்தியுள்ளது.
'சிக்னேச்சர் கேர்ஸ்' என்ற கார்ப்பரேட் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் மூலம், கெச்சாராவின் எதிர்கால திறன் மேம்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப இம் மையம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு தசாப்தங்களாக உணவளித்து வந்த இம் மையத்திற்கு, உணவு விநியோகத்தோடு சேர்த்து பயனாளிகளுக்கு சுயசார்பு பயிற்சிகள் அளிக்கும் புதிய வசதி தேவைப்பட்டது.
வீட்டு வசதித் தீர்வுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட சிக்னேச்சர் நிறுவனம், தன்னார்வலர்கள், பயனாளிகளுக்கு ஏற்றவாறு இம் மையத்தின் பணிச்சூழலை முழுமையாக மேம்படுத்தியுள்ளது.
இந்த மையம் ஒரே நேரத்தில் தினசரி உணவு விநியோக மையமாகவும், பயனாளிகளுக்குச் சமையல், பேக்கிங் போன்ற தொழிற்பயிற்சிகளை வழங்கும் திறன் மேம்பாட்டு மையமாகவும் செயல்படுகிறது.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 10:07 pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
October 5, 2026, 3:40 pm
சீரகத் தூளில் பூச்சிக்கொல்லி மருந்து: உடனடியாக அகற்ற இந்திய அரசு உத்தரவு
September 26, 2026, 12:30 pm
வட அமெரிக்காவில் மேலும் 250 கடைகளை மூடும் Starbucks
September 11, 2026, 4:22 pm
ஃபேன்சி அகாடாமி அணிச்சல், பேக்கரி துறையில் திறமையான சாதனையாளர்களை உருவாக்கும்: விக்னேஸ்வரி நம்பிக்கை
September 11, 2026, 3:07 pm
இந்தியாவில் iPhone விலை 41% வரை அதிகரிப்பு
September 6, 2026, 5:39 pm
சிங்கப்பூரில் curry puff வாங்க சீனாவிலிருந்து வந்த விநியோக ஊழியர்
September 2, 2026, 4:36 pm
இந்தியாவின் முன்னணி பெருங்காய நிறுவனங்களான எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனப் பெருங்காயங்கள் விற்பனைக்கு தடை
August 31, 2026, 8:14 pm
சிங்கப்பூரில் உத்தரவாதமில்லாக் கடன் பெறுவோர் - மறுபரிசீலனை செய்ய 3 நாள் அவகாசம்
August 30, 2026, 9:46 pm
கே8 சரக்குகளைக் கையாள்வது குறித்து அரசும், ஏஜென்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும்
August 26, 2026, 11:58 am
