செய்திகள் மலேசியா
தபோங் ஹாஜியின் RCI அறிக்கையை விவாதிக்க மறுப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
கோலாலம்பூர்:
தபோங் ஹாஜியின் அரச விசாரணை அறிக்கையை விவாதிக்க மறுப்பு தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு மக்களவை கூட்டத்திற்கு வருகை தராததால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தரப்பு இந்த முடிவினை எடுத்தனர்.
தபோங் ஹாஜியின் RCI அறிக்கை தொடர்பான விவாதத்தில் பிரதமர் அன்வாரின் வருகை அவசியமானது என்று தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தக்கியுடின் ஹசான் கூறினார்.
இதற்கு முன்னதாக, இச்சிறப்பு கூட்டத்தை ஒத்திவைக்குமாறு மக்களவை சபாநாயகர் ஜொஹாரி அப்துல் அவர்களுக்கு எதிர்க்கட்சியினர் அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியிருந்தனர்.
மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு பிரதமர் மீண்டும் பணிக்குத் திரும்பும் வரை இக்கூட்டத்தைத் தள்ளிவைக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டிருந்தது.
தபோங் ஹாஜியின் விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று வெளியேறலாம் என்று மக்களவை சபாநாயகர் சொன்னவுடன்
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டாக அவையை விட்டு வெளியேறி தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, தபோங் ஹாஜி அறிக்கை மீதான விவாதம் எதிர்க்கட்சியினரின் பங்கேற்பின்றி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 11:03 am
