செய்திகள் மலேசியா
தபோங் ஹாஜி RCI சிறப்பு மக்களவை கூட்டத்தில் பங்கேற்க முடியாதத்தற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் மன்னிப்பு
கோலாலம்பூர்:
தபோங் ஹாஜியின் அரச விசாரணை ஆணையத்தின் விசாரணை தொடர்பாக விவாதிக்க சிறப்பு மக்களவை கூட்டம் இன்று நடத்தப்படுகிறது.
இருப்பினும் இந்த சிறப்பு மக்களவை கூட்டத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பங்கேற்காதது குறித்து பிரதமர் அன்வார் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தச் சிறப்பு நாடாளுமன்ற விவாதம் சிறப்பாகவும் சீராகவும் நடைபெற வேண்டும் என்று அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் மூத்த ஊடக செயலாளர் துங்கு நஷ்ருல் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்து கொண்டார்.
இஸ்லாமிய நிறுவனத்தின் பொறுப்புகளும் நம்பிக்கையும் தொடர்ந்து பேணப்படுவதை உறுதிசெய்ய, நாடாளுமன்ற விவாதங்களை அன்வார் உன்னிப்பாகக் கவனிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு வயிறு தொடர்பான லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை சீராக முன்னேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 11:03 am
