செய்திகள் மலேசியா
IJN-ல் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரியை சந்தித்து நலம் விசாரித்தார் துணைப்பிரதமர் ஜாஹித் ஹமிடி
கோலாலம்பூர்:
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி தேசிய இதய நிறுவனத்தில் (IJN) தற்போது சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோபை சந்தித்து நலம் விசாரித்தார்.
பெரா நாடாளுமன்ற உறுப்பினரும் என் நண்பருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி குணமடையவும், தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் பிரார்த்தனை செய்ததாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி தனது x தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
"அவருக்கு தொடர்ந்து வலிமையும் நல்ல ஆரோக்கியமும் கிடைக்க வேண்டும் என்றும், அவருடைய அனைத்துப் பிரச்சனைகளும் எளிதாக வேண்டும் என்றும், அவர் முழுமையாகக் குணமடைய வேண்டும் என்றும் நான் பிரார்த்திக்கிறேன்," என்று அவர் கூறினார்.
இஸ்மாயில் சப்ரி தனது சேவையையும் அன்றாட நடவடிக்கைகளையும் வழக்கம் போல் மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அஹ்மத் ஜாஹித் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 6 அன்று, தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (MACC) இருந்தபோது இஸ்மாயில் சப்ரிக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் IJN-க்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, அசாதாரணமான இதய நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக, அந்த நிறுவனத்தில் அவருக்குக் கம்பியில்லா இதயத் துடிப்புச் சீராக்கி பொருத்தும் (ஃபேஸ் மேக்கர்) செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 11:03 am
