நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெபிமாவின் 25ஆம் ஆண்டு மார்க்க போட்டிகள் நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் ஜாஹித் ஹமிடி சார்பில் 50,000 ரிங்கிட் வழங்கப்பட்டது

கோலாலம்பூர்:

21 மதராஸாக்களும் 350 மாணவர்களும் பங்கேற்ற கெபிமாவின் 25ஆம் ஆண்டு மார்க்க போட்டிகள் நிகழ்ச்சி நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

இஸ்லாமிய சமய விவகாரத் துறையின் துணை அமைச்சர் புவான் மர்ஹமா ரோஸ்லி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியதோடு மாணவ மாணவிகளிடம் கேள்விகள் கேட்டு உறசாகப்படுத்தினார். கெபிமாவின் மார்க்க நிகழ்ச்சிகளை அவர் சிலாகித்துப் பேசினார்.

தொடர்ந்து பேசிய துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஜாஹித் ஹமிதியின் முதன்மை அரசியல் செயலாளரும் பிரதிநிதியுமான டத்தோ வீரா ஹாஜி மெகாட் சுல்கர்னைன் பின் டான் ஸ்ரீ ஒமர்தீன் கெபிமாவின் 25 ஆண்டுக்கால திலாவா போட்டிகளுக்கு துணைப் பிரதமரின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். 

இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற துணைப் பிரதமர் கெபிமாவிற்கு ஊக்க நிதியாக 50,000 ரிங்கிட் வழங்குவதாக பலத்த கர ஒலிகளுக்கு இடையில் அறிவித்தார்.

கடந்த 25 ஆண்டு காலமாக இந்திய முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கெபிமாவின் நிறுவனரும் ஆலோசகருமான
முஹம்மது பின் காதிர் அலி கூறினார்.

25 ஆண்டுகால நிகழ்ச்சியின் தொகுப்பாக காணொலி ஒன்றும் திரையிட்டு காட்டப்பட்டது.

பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. ஜொகூர், பினாங்கு, கெடா, பேராக், சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேசம் என்று 21 மதரஸாக்களில் இருந்து சுமார் 350 மாணவ மாணவிகள் பல்வேறு மார்க்கப் போட்டிகளில் பங்கேற்றனர்.

டத்தோ டாக்டர் செய்யது இப்ராஹிம், டத்தோ ஜவஹர் அலி, டத்தோ ஹிஷாமுத்தீன் டான் ஸ்ரீ உபைதுல்லா, டத்தோ வீரா நைனா அப்துல் காதர், கிளந்தான் சுல்தான், ஜொகூர் ஹுசைன் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் மதரஸா நிர்வாகிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை ஸ்ரீ ரம்பாய் மதரசா அல் ஃபரிதிய்யா தட்டிச் சென்றது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset