நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்லிஸ் அம்னோ அனைத்து 15 சட்டமன்றம், மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் தனித்துப் போட்டியிடத் தயார்: ரோசாபில்

அராவ்:

மாநிலத்தில் உள்ள 15 மாநில சட்டமன்றத் தொகுதிகள், மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள் அனைத்திலும் வரவிருக்கும் தேர்தல்களைத் தனித்து எதிர்கொள்வதற்கான தனது நிலைப்பாட்டை பெர்லிஸ் அம்னோ எடுத்துள்ளது.

பெர்லிஸ் அம்னோ தொடர்பு குழுத் தலைவர் டத்தோ ரோசாபில் அப்துல் ரஹ்மான் இதனை கூறினார்.

மாநில அளவில் தேசியக் கூட்டணி உட்பட எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் எதுவும் நடத்தப்படவில்லை.

கடந்த தேர்தலில் பெர்லிஸில் அம்னோ எந்த இடங்களையும் வெல்லாததால், தற்போது கட்சியின் முக்கிய கவனம் ஒவ்வொரு பகுதியிலும் பணியாற்றுவதிலேயே உள்ளது.

பெர்லிஸைப் பொறுத்தவரை, தேசியக் கூட்டணி உட்பட எந்தக் கட்சியுடனும் நாங்கள் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. 
கட்சி உறுப்பினர்களின் நோக்கமும், செய்யப்பட்ட பணிகளும், 15 சட்டமன்றம், மூன்று நாடாளுமன்றங்களிலும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவதற்கான தயார் நிலையாகும்.

பெர்லிஸ் அம்னோவுக்கு இது மிகவும் தெளிவான ஒரு நிலைப்பாடு. 

வரவிருக்கும் தேர்தல்களுக்காக நாங்கள் கூட்டணி அமைப்பது குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. 
தற்போதைக்கு இதுதான் பெர்லிஸ் அம்னோவின் நிலைப்பாடு என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset