நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏவில் போதைப்பொருட்கள் கடத்தல்; பயணப் பெட்டி சோதனை வரம்பை அரசு மறுபரிசீலனை செய்யும்: சைபுடின் நசுதியோன்

புத்ராஜெயா:

விமான நிலையங்களில் கடத்தல் பொருட்களைக் கண்டறியும் திறன் உட்பட, பயணப் பெட்டி சோதனையின் வரம்பை அரசு மறுபரிசீலனை செய்யும்.

அதே நேரத்தில், நாட்டின் நுழைவாயில்களில் பாதுகாப்பை வலுப்படுத்த மேலும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கும்.
அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பால்  நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்க, தற்போது பயணப் பெட்டி சோதனை செயல்முறையானது விமானப் பாதுகாப்பு குழுவால் கையாளப்படுகிறது.

மேலும் ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் கூறினார்.

பயணப் பெட்டி சோதனையைப் பொறுத்தவரை மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்  துணைப் காவல் துறையான விமானப் பாதுகாப்பு குழுவின் முன்னுரிமையானது, 

அனைத்துல்க சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் கீழ் உள்ள சர்வதேச விமான நிலைய சோதனைத் தரநிலைகளுக்கு இணங்கவே உள்ளது.

எனவே, ஆயுதங்கள், துப்பாக்கிகள், கூர்மையான ஆயுதங்கள், குண்டுகள் மற்றும் பலவற்றின் மீதுதான் அதிக முன்னுரிமைக் கவனம் செலுத்தப்படுகிறது. 

இது ஒரு கடத்தல் சம்பவம், ஆம். ஸ்கேனிங் இயந்திரங்களுக்கு இங்கு எந்தக் குறைவும் இல்லை என்று அவர் கூறினார்.

புத்ராஜயா டத்தாரானில் நடைபெற்ற ஸ்டார் சிட்டி எப்சி சுற்றுப்பயணத்தின் புறப்பாட்டு விழாவிற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset