நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக்கில் இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது; 423 இந்திய குடும்பங்களுக்கு நிலப்பட்டா: டத்தோ சிவநேசன்

ஈப்போ:

பேராக்கில் வாழும் அனைத்து சமூக மக்களின் வளர்ச்சி, கல்வி, வேலை வாய்ப்பு,  அடிப்படை வசதிகளை உறுதி செய்வதுடன், இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பல. நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் இதனை தெரிவித்தார்.

பேராக்கில் நீண்ட காலமாக நிலப்பட்டா இல்லாமல் அரசாங்க நிலத்தில் வசித்து வந்த இந்திய குடும்பங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாம் பொறுப்பேற்ற பின்னர், 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முதற்கட்டமாக சுமார் 157 இந்திய குடும்பங்களுக்கு நிலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட பிரச்சினைகளின் அடிப்படையில் இதுவரை பேரா மாநிலத்தில் சுமார் 423 இந்திய குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டு நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக அரசாங்க நிலத்தில் வசித்தும் நிலப்பட்டா கிடைக்காமல் இருந்த குடும்பங்களின் பிரச்சினைகள் படிப்படியாகத் தீர்க்கப்பட்டு வருகின்றன.

சுங்கை , ஆயர் கூனிங் , தாப்பா, சுற்றுப்புறப் பகுதிகளில் இதுபோன்ற பல பிரச்சினைகள் இந்த ஆண்டு தீர்க்கப்பட்டுள்ளன.

இன்று கம்போங் குவால பிக்காம் பகுதியில் 24 பேருக்கு நிலப்பட்டா வழங்கப்படுள்ள தகவலையும் தெரிவித்தார்.

பேராக்கில் பல இடங்களில் மின் சுடலையின்றி இருந்த இடங்களில் பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாக டத்தோ அ. சிவநேசன் மேலும் கூறினார்.

மூவாலிம், பத்தாங் பாடாங் மாவட்டம் மற்றும் தாப்பா பகுதிகளை உள்ளடக்கிய இடங்களில் மின்சுடலை இல்லாததால், அதற்கு கம்பார் அல்லது தெலுக் இந்தான் போன்ற தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை மக்களுக்கு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அதன் அடில்படையில் கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், அரசாங்கத்திடமிருந்து சுமார் 1.3 ஏக்கர் நிலம் பெறப்பட்டு, 3 மில்லியன் ரிங்கிட் செலவில் பீடோரில் சாலையோரத்தில் மின் சுடலை கட்டப்பட்டு வருகிறது.

இன்னும் சுமார் இரண்டு மாதங்களில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர் இப்பகுதி மக்கள் மின்சுடலை இல்லாத பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்காது, என்றார்.

மேலும், பேராக்கில் உள்ள ஆலயங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

சுங்கை சட்டமன்றத் தொகுதியில் உள்ள நான்கு தமிழ்ப்பள்ளிகளுக்கும் நேரடியாகச் சென்று அவற்றின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை கேட்டறிந்து, அவற்றுக்கான தீர்வுகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்றிரவு பீடோர் சீன கோவில் மண்டபத்தில் சுங்கை சட்டமன்ற தொகுதியில் ஜ.செ.க. ஏற்பாட்டில். நடைபெற்ற விருந்தோம்பில் நிகழ்வில் கலந்துக்கொணடப் பின்னர் செய்தியாளர்களிடம் இந்த தகவலைத் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset