நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேனாசோனிக் தொழிற்சாலை மூடப்படுகிறது; அடுத்த வாரம் தொழிலாளர்களை சிலாங்கூர் அரசு சந்திக்கிறது: அமிரூடின்

ஷா ஆலம்:

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பேனாசோனிக் தொலைக்காட்சி தயாரிப்பு தொழிற்சாலையின் செயல்பாடு நிறுத்தப்படுவதால் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்கள் குழுவுடன் சிலாங்கூர் அரசு அடுத்த வாரம் ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளது.

தொடர்புடைய தகவல்களைப் பெறுவதற்காக, சிலாங்கூர் மனிதவளம், வறுமை ஒழிப்பு செயற்குழு உறுப்பினர் வி. பாப்பாராய்டு, சமூகப் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதிகளால் இந்தக் கூட்டம் நடத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அடுத்த வாரம், பாப்பாராய்டு சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து, குறிப்பாக அவர்களின் தொழிற்சாலை மூடப்பட வாய்ப்புள்ள இக்காலகட்டத்தில், அவர்களுக்குத் தேவையான ஆதரவைக் கோரவும் வழங்கவும் உள்ளார்.

உணவுப் பொருட்கள் வழங்கும் உதவி போன்ற ஆரம்பகட்ட தலையீட்டு நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயமாக மேற்கொள்வோம். 

அதுமட்டுமின்றி, இந்த மாநிலத்தில் பல ஆண்டுகளாக அவர்கள் கட்டமைத்த வாழ்க்கையைத் தொடர ஏதுவாக, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளைக் கண்டறியவும் உதவுவோம்.

சிலாங்கூர் வேலை வாய்ப்பு 2026 திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset