நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதவளத் துறையின் மேம்பட்ட தொழில்நுட்பக் கல்லூரியுடன் மாணவர் பரிமாற்றத் திட்டத்திற்கான முன்மொழிவை சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் வரவேற்கிறது

சிங்கப்பூர்:

மனிதவள அமைச்சகத்தின் கீழ் உள்ள மனிதவளத் துறையின் மேம்பட்ட தொழில்நுட்பக் கல்லூரியுடன் தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டத்தை நிறுவுவதற்கான முன்மொழிவை சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் வரவேற்றுள்ளது.

திவேட் துறையில் தனது அனைத்துலக ஒத்துழைப்பு வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கான அமைச்சின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிங்கப்பூருக்கு மேற்கொண்ட தனது பணிப் பயணத்தின் போது இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

இந்த நேர்மறையான வரவேற்பு ஒரு சாதகமான முன்னேற்றம்.

இது மாணவர் பரிமாற்ற வாய்ப்புகள், தொழில்நுட்ப மற்றும் திறன் பயிற்சியில் சிறந்த நடைமுறைகள் குறித்த அறிவு மற்றும் கொள்கைகளைப் பகிர்ந்துகொள்வது உள்ளிட்ட ஒத்துழைப்பின் வடிவத்தை இரு தரப்பினரும் விரிவாக விவாதிப்பதற்கு வழிவகுத்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தின் மூலம் மனிதவளத் துறையின் மேம்பட்ட தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பரந்த அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதே எனது நோக்கம். 

எனவே, இந்தப் பயணத்தின் போது இந்த முன்மொழிவை நான் தெரிவித்தேன், 

மேலும் சிங்கப்பூர்  தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் சாதகமான கருத்தைத் தெரிவித்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset