நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முஸ்லிம் முன்னேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் தலைநகர் மாட்ரேட் மைய்யத்தில் மாபெரும் மீலாதுன் நபி பெருவிழா: சர்வதேச பேச்சாளர்கள் சொற்பொழிவாற்றுகிறார்கள்

கோலாலம்பூர்:

பெட்டாலிங் ஜெயா ஓல்டு டவுன் முஸ்லிம் முன்னேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் சூராவ் முஹம்மதியா ஆதரவில் தலைநகரில் மாபெரும் மீலாதுன் நபி பெருவிழாவும் சிறந்த மாணாக்கர்க்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சியும் மீண்டும் நடத்தப்பட உள்ளது என்று அச் சங்கத்தின்  தலைவர் ஹாஜா நஜ்முத்தீன் அமானுல்லாஹ்வும் சூராவ் முஹம்மதிய்யாவின் தலைவருமான இப்ராஹிம் தெரிவித்தனர்.

எங்கள் சங்கத்தின் அறங்காவலர் டத்தோ ஸ்ரீ முஹம்மது இக்பால், சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ஜமருல்கான் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் உத்தம திரு நபியின் உதய தின விழா தலைநகர் மாட்ரேட் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சியில் சர்வதேச பேச்சாளர்கள் சொற்பொழிவாற்ற இருக்கிறார்கள்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி செப்டம்பர் 19ஆம் தேதி மாட்ரேட் செண்டரில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியின் தலைவராக அஸ்மி சதக்கத்துல்லா இயங்குவார் என்று ஹாஜா நஜ்முத்தீனும் இப்ராஹிமும் தெரிவித்தனர்.

இந்த மாபெரும் விழாவில் பொது மக்கள் கலந்துகொண்டு அடிமை விலங்கொடித்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வியல் பாடங்களை தெரிந்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கிறோம் என்று முஸ்லிம் முன்னேற்ற சங்கத்தின் சார்பிலும் பிஜே ஓல்டு டவுன் சூராவ் முஹம்மதியாவின் தலைவர் இப்ராஹிமும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset