நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு அரசாங்கத்தில் தேசிய முன்னணி ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நீடிப்பார்கள்; ஒத்துழைப்பு தொடரும்: சாவ்

ஜார்ஜ்டவுன்:

நெகிரி செம்பிலானில் தேசியக் கூட்டணி அமைத்திருந்த போதிலும், பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக் குழுவில் நீடிப்பார்கள்.

ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட ஒத்துழைப்பைத் தொடர முடிவு செய்துள்ளது.

இது 2023 பொதுத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட தேர்தல் கூட்டணிக்கு இணங்க அமைந்துள்ளது.

பினாங்கு ஜசெக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைவர் சாவ் கோன் இயோவ் கூறினார்.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி தனது பதவிக்காலம் முடியும் வரை மத்திய ஒற்றுமை அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார் என்று அவர் கூறினார்.

சுங்கை ஆச்சே சட்டமன்ற உறுப்பினராக உள்ள ரஷிதி சினோலை, ஊரக வளர்ச்சி, வேளாண் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு, தொழில்முனைவு ஆகியவற்றுக்கான ஆட்சிக் குழு உறுப்பினராகத் தக்கவைக்கும் முடிவு, இன்று நடைபெற்ற பினாங்கு நம்பிக்கை கூட்டணி தலைமைத்துவக் கூட்டத்தில் ஒருமனதாக எட்டப்பட்டது.

ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி இடையே நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset