செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் 100,000க்கும் அதிகமான பிள்ளைகளுக்கு கோவிட் 19 முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது: கல்வியமைச்சு
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் 100,000க்கும் அதிகமான பிள்ளைகளுக்கு COVID-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
5இலிருந்து 11 வயது வரையுள்ள பிள்ளைகளுக்கு முதல் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது.
தொடக்கநிலை 1 முதல் 6 வரை படிக்கும் மாணவர்களில் கிட்டத்தட்ட ஐந்தில் இருவர் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சிங்கப்பூர் கல்வி அமைச்சு கூறியுள்ளது.
முன்பதிவின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஏற்பாட்டின்கீழ், கடந்த திங்கட்கிழமையிலிருந்து வியாழன்வரை 2,800க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பயனடைந்துள்ளனர்.
அதாவது, சராசரியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்த பிள்ளைகளில் 20 விழுக்காட்டினர் தங்கள் உடன்பிறந்தோரையும் அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.

SPED எனும் சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கான 12 பள்ளிகளில், தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளன.
சிறப்புத் தேவையுள்ள மாணவர்கள் மூவரில் இருவர் அங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பதிவுசெய்துள்ளனர்.
தகுதிபெற்ற பிள்ளைகளுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடும் பணி நாளை மறுநாளிலிருந்து அதாவது 17 ஜனவரி ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
December 27, 2025, 6:01 pm
பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்கள் இனி அரசு ஊழியர்கள்: ஷார்ஜா அரசு அறிவிப்பு
December 27, 2025, 9:02 am
உம்ரா விசாவில் மக்காவில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களுக்கு வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசு தடை
December 26, 2025, 5:10 pm
நைஜீரியா நாட்டு பள்ளிவாசலில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி
December 25, 2025, 5:44 pm
கலிபோர்னியாவில் விரைவில் கடுமையான புயல், வெள்ளம் ஏற்படும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
December 25, 2025, 12:13 pm
முன்னாள் வழக்கறிஞர் M ரவியின் மர்ம மரணம்: அவருக்கு போதைப்பொருள் கொடுத்த நபர் கைது
December 23, 2025, 4:33 pm
கிறிஸ்துமஸை ஒட்டி சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
December 22, 2025, 8:32 am
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் கைது
December 20, 2025, 3:06 pm
